சேலத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் வடிகால் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு...

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி 17. வது கோட்டம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை இரா. அருள்.எம். எல்.ஏ பார்வையிட்டார் ..

சேலம் பேர்லேண்ட்ஸ் பகுதி மழைக்காலங்களில் வெள்ளக்காடாக மாறிவிடுகிறது. இதுபோன்று தொடர்ந்து நடந்து வருகிறது இதற்கு என்ன காரணங்கள் என்றால் ஓடைகள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால்  மழைநீர் செல்ல வழியில்லை.இதனை பேர்லேண்ட்ஸ் பகுதி ஒட்டுமொத்த மக்களின் வேண்டுகோளாக ஏற்று சட்டமன்றத்தில் அருள்.எம். எல்.ஏ பேசியுள்ளார் .
தமிழ்நாடு அரசு சட்டமன்ற தொகுதி சார்ந்த 10.பிரதான கோரிக்கைகளில் முன்மொழிய கேட்டிருந்தார்    . அதன் அடிப்படையில் சேலம் பேர்லேண்ட்ஸ்  வெள்ளக்காடாக உள்ளது காப்பாற்ற வேண்டுமென  கோரிக்கையும் முன் வைத்தார் .
அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ரூபாய் 8 கோடி உங்கள் தொகுதி முதல்வர் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணி தற்போது தொடங்கி தோப்புக்காடு முதல் பேர்லேண்ட்ஸ் முருகன் கோயில் வழியாக ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய பேருந்து நிலையம் வரை 3.5 மீட்டர் அகலத்திற்கு பெரிய மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணியினை இன்று பார்வையிட்டு அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கினார்.
இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் அவர்களை வெகுவாக பாராட்டினார்கள் அப்பகுதி மக்கள் . 
உடன் பகுதி செயலாளர் ஏ கே நடராஜன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சிட்டி வேல்முருகன், 17 கோட்டம் செயலாளர் ராஜசேகர் , பாலாஜி, கௌதம் மற்றும் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர் ...

Post a Comment

0 Comments